வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வல்வெட்டித்துறையில் ஒரு கல்யாண மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் (வங்கிக் கணக்கு இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள்) கீழே இணைக்கப்பட்டுள்ள தர்மகர்த்தா சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும், கல்யாண மண்டபத்தைப் பூர்த்தியாக்க சுமார் 2 கோடி (இலங்கை ரூபாய்கள்) தேவைப்படும் என எதிர்பார்க்கபடுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கல்யாண மண்டபம் வல்வை அம்மன் கோவிலின் வடக்கு வீதியில், அம்மன் கோவில் மின்சார அறைக்கு அருகாமையில், பழைய தபாற்கந்தோர் இயங்கிய இடத்தில் அமையவுள்ளது குறிபிடத்தக்கது.
இது வல்வையில் அமையவுள்ள முதலாவது கல்யாண மண்டபம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலே காட்டப்பட்டுள்ளது ஒரு 'மாதிரி படம்' மட்டுமாகும். அமையப்படவுள்ள பல சிற்ப வேலை பாடுகள் இதில் காட்டப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.