வல்வை கோவிலில் சிறுமி மீது துஷ்பிரயோகம், பூசகர் உதவியாளர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2019 (சனிக்கிழமை)
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வல்வெட்டித்துறையின் பிரதான கோவில் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்று பொருளாக ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோவில் பூசகர் உதவியாளர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் உதவியாளர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகர் உதவியாளரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது
பூசகர் உதவியாளர்மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.(online jaffna)
மேற்குறிப்பிட்ட செய்தி இன்றைய யாழ் தினசரி பத்திரிகைகளிலும், பல இணையதளங்களிலும் நேற்று வெளிவந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.