மென்பந்தாட்டம், தண்ட உதை இறுதிப்போட்டி - ரெயின்போ, இளங்கதிர் விளையாட்டுக்கழகங்கள் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2013 (சனிக்கிழமை)
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டம், மற்றும் தண்ட உதைப் போட்டிகளின் இறுதி போட்டிகள் இன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற மென்பந்தாட்டம் இறுதிப் போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ரெயின்போ விளையாட்டுக்கழகம் 10 Over நிறைவில் 84 ஓட்டங்களை பெற்றது. 85 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் 10 Over நிறைவில் 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் ரெயின்போ விளையாட்டுக்கழகங்கம் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த சுற்றுத் தொடரில் சிறந்த விருதுகளாக அதிக விக்கெட்டுக்களை எடுத்தற்காக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் அன்புவிற்கும், தொடர் ஆட்ட நாயகனாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் அபிநயனுக்கும் மற்றும் அதிக ஓட்டங்களை எடுத்தற்காக ரெயின்போ விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் ருதேசாவிற்கும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக ரெயின்போ விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் பிரணவனுக்கும், மற்றும் வளர்ந்து வரும் வீரருக்கான விருதாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் பிரசாந்துக்கும் வழங்கப்பட்டிருந்தது.
மென்பந்தாட்டத்தை தொடர்ந்து ரெயின்போ விளையாட்டுக்கழகம் மற்றும் இளங்கதிர் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான தண்ட உதை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சிறந்த தண்ட உதை வீரராக இளங்கதிர் விளையாட்டிக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் மதுசாந்தனும், சிறந்த கோல் காப்பாளராக இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் விஜிகரனும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
இன்று காலை ஆரம்பித்திருந்த இந்த சுற்றுப்போட்டியில் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகம் , வல்வை சைனிங்ஸ் A விளையாட்டுக்கழகம், வல்வை சைனிங்ஸ் B விளையாட்டுக்கழகம், வல்வை தீருவில் விளையாட்டுக்
கழகம், வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் ஆகிய 6 கழகங்களைச் சேர்ந்த 7 அணிகள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.