யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கின் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் தரம்-08 இல் கல்வி கற்கும் தாளையடி கிராமத்தை சேர்ந்த மாணவன் ஆன்சன் நேரியோ அபினாஸ் தமிழ்த் தினப் போட்டியின் ஆண்களுக்கான தனி இசை நாட்டார் நடனத்தில் கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று கண்டியில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
இம்மாணவனை பாடசாலை சமூகம், தாளையடி கிராம மக்களும் இணைந்து அண்மையில் கௌரவித்தனர்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இம்மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது மட்டுமல்லாது ஆங்கில தினப் போட்டியின் ஆங்கில பேச்சில் கோட்ட மட்டதில் 2ம் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.