வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பமானதையிட்டு ஏற்பட்டுள்ள சீதோஷன மாற்றத்தினால் வல்வெட்டித்துறையின் தீருவில் வெளிப் பகுதிகளில் ஏராளமான பறவைகள் வந்து செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. படங்களில் நேற்று தீருவில் பகுதியில் காணப்பட்ட பறவைகளைக் காணலாம்.
ஜப்பசி மாத இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலையின் போது, தொண்டைமானாறு தொடக்கம் ஆனையிறவு வரையான, யாழ் கடல் நீரேரிக்கும், தமிழகத்தின் வேதாராண்யம் பகுதியில் அமைந்துள்ள கோடியாக்கரை பறவைகள் சரணாலயத்துக்கும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருவது குறிப்பிடத்தக்கது.
கோடியாக்கரை ஆனது வல்வெட்டித்துறையிலிருந்து சுமார் 35 கடல் மைகள் தொலைவிலேயே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் வல்லைப் பகுதியல் காணப்பட்ட பறவைகளின் காட்சி
வேதாரண்யம் - கோடியாக்கரை பறவைகள் சரணாலயம் - இரு மாதங்களின் முன்பு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.