உலக வல்வெட்டித்துறை ஒன்றிய சமூகம் ஆழ்ந்த கண்ணீர் வீர அஞ்சலி தந்து விடை கொள்கின்றது
தந்தை பயில்வான் சோமசுந்தரம் போல் வல்வெட்டித்துறை மண்ணுக்கு வரலாறும் வாசமும் தந்தவன் நீங்கள்.
வல்வெட்டித்துறை யா. சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழாவில் அணி நடைக்கு முன்பாக கல்லூரியின் கொடி ஏந்தி வந்து சத்தியபிரமபணம் செய்த அற்புத காட்சி எமது ஊரின் விளையாட்டுத் துறையை நேசித்தவர்களின் மனங்களில் இன்னும் பசுமையாக இருக்கின்றது.
கல்லூரியின் விளையாட்டு போட்டி முடிந்த பிற்பாடு வரிசையாக கழகங்ளின் விளையாட்டு விழாக்கள் ஆரம்பமாகிவிடும்.
கல்லூரி வாழ்க்கையில் கைப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் கிரிக்கெட் குறுந்தூர ஓட்டம் சாரணர் என்று பன்முக விற்பன்னராக வாழ்ந்தாகாலத்தை வல்வையின் வரலாறு கௌரமாக பதிந்து வைத்திருக்கிக்றது.
வல்வெட்டித்துறையின் நெற்கொழு மைதானம் பந்தடியுடன் மற்றைய விளையாட்டு வீரர்களும் கிரமமாக நாள் தோறும் பயிற்சி பெற்ற காலம்தான் சிதம்பராக்கல்லூரியில் இருந்து யாழ்மாவட்டத்திலும் தெரிவாகி கொழும்பு வரை சென்று ஊர் மண்ணுக்கு பெருமைகள் சேர்த்த ஒரு பொற்காலத்தில் வாழ்ந்த உங்களை உங்கள் தந்தை பயில்வான் நாமத்துடன் வல்வெட்டித்துறை மண்ணின் வரலாறு மாவீரனாக வரைந்து கொள்கின்றது.
விளையாட்டுத்துறையில் அன்பாக பண்பாக பேசி எல்லோரையும் அரவனைத்து செல்லும் வல்வெட்டித்துறை மக்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகி இன்றைய நட்புக்குழுக்களின் முன்னோடிகளில் ஒருவராக நீங்களும்.
வல்வெட்டித்துறை மண்ணுக்கு குடும்பமாக விளையாட்டுத்துறைக்கு பெருமையும் வரலாறும் தந்த சகோதரங்களுடன் பிறந்து வாழ்ந்த குடும்பமாக உங்கள் குடும்பமும் நீங்களும்.
வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் எல்லா விசேட காலங்களுக்கும் தந்தையாருடனும் சகோதரங்களுடனும் செய்த சிவதிருத்தொண்டுகளும் உங்கள் வாழ்வின் பொற்காலம்.
இவை போன்று வல்வெட்டித்துறையின் இளைய சமுதாயம் உங்களிடம் கற்றவை ஏராளம்.
வல்வெட்டித்துறையில் பலர் பிறந்து இறந்து போய் உள்ளார்கள். இவ்வேளையில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்தவர்கள் வரிசையில் உங்களை வரிசைப்படுத்தி உலக வல்வெட்டித்துறை ஒன்றிய சமூகம் ஆழ்ந்த கண்ணீர் வீர அஞ்சலி தந்து விடை கொள்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: March 09, 2020 at 18:59
I’M VERY SADDENED TO HEAR THE NEWS OF KAANDEEPAN ANNA’S PASSING AWAY.
MY HEART GOES OUT TO HIS FAMILY IN THEIR TIME OF SORROW.
I PASS MY DEEPEST AND HEARTFELT CONDOLENCES TO HIS FAMILY.
GOD REST OUR KAANDEEPAN ANNA IN PEACE.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.