அரச உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பெண் ஒருவரின் பல லட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி ஒன்று அபகரிக்கப் பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வல்வை நகரசபைக்கு உட்பட்ட பொலிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை அலுவலக பணி முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை பொலி கண்டியை அண்மித்த உட்பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தமது வண்டியை குறுக்காக நிறுத்தி சிறிய கோடாரி ரக ஆயுதத்தை காட்டிப் பயமுறுத்தி குறித்த தாலிக் கொடியை பறித்து சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக வல்வெட்டிதுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணைகளை முன் எடுத்து வருவதாகவும் கூறப் படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.