வல்வெட்டித்துறை சந்தி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்? பொது மக்கள் பார்வைக்கு அனுமதி!!! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதுடன் பொது மக்களைப் பார்வையிடவும் அனுமதியளித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு தற்பொழுது பொதுமக்கள் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களையும் மற்றைய இடங்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் அமைந்ததுள்ள குடியிருப்புக்களின் உரிமையாளர்களுக்கு, குடியிருப்புக்களை பொறுப்பேற்கவருமாறு சில தினங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இது இவ்வாறு இருந்த போதும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொடந்தும் ஓரிரு இராணுவத்தினரை முன்னர் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
புதிய இராணுவ முகாம் தற்பொழுது வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் 1990 களில் விடுதலைப்புலிகள் "கடல்புறா" என்னும் பெயர் கொண்ட கடல் புலிகளின் முகாமை ஒன்றை அமைத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.