வல்வை சிவன் கோவிலில் நடைபெற்ற தெய்வானை திருக்கல்யாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக இன்று, தெய்வானை திருக்கல்யாணம் இன்று வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மாலை சுமார் 6 மணியளவில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த திருக் கல்யாண நிகழ்வு சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்றுள்ளது.
திருக்கல்யாணம் – கந்த புராணத்திலிருந்து
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அதாவது இன்று முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு, தேவமயிலாகவும் மாறி சேவைசெய்தார் என்றும், மேலும் இவர்களது திருமணம் முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் திருக் கல்யாணம் நடந்தது எனக் கந்தபுராணம் கூறுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.