யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை இறங்கு துறைமுக வீதி நேற்று மக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த வீதி 1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை இராணுவத்தின் பருத்தித்துறை முகாம் பிரதேசத்திற்குள் உள்ளங்கியிருந்தது.
மேலும் இவ் இராணுவ முகாமின் கட்டுப்பாட்டிலிருந்த பல வீடுகள் மற்றும் காணிகள் நேற்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
படங்களில் பருத்தித்துறை சந்தியிலிருந்து இறங்குதுறைக்கு செல்லும் இறங்குதுறை வீதியையும் ( பருத்தித்துறை-யாழ்ப்பாண வீதி) மற்றும் இதுவரை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த பொதுமக்களின் வீடுகளையும் காணிகளையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.