இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரசுடனேயே மக்கள் வாழவேண்டியிருக்கும்- சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளர்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2020 (வெள்ளிக்கிழமை)
மக்கள் மேலும் இரண்டுவருடங்களுக்கு கொரோனாவைரசுடனேயே வாழவேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.
மக்கள் கொவிட் 19 உடன்வாழபழகிக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாவது அலையின் போது கொரோனா வைரசிற்கு தீர்வை காணவிட்டால் மூன்;றாவது அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலை ஜனவரியில் உருவாகலாம் அது இன்னமும் ஆபத்தானதாக காணப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவி;த்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றி வைரசினை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கை மக்களும் கொரோனா வைரசுடன் வாழவேண்டியிருக்கும்; என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் தங்கள் நாடுகளில் கொரோனாவைரஸ் காணப்படுகின்ற போதிலும் தொடர்ந்து முன்னோக்கி செல்கின்றன என குறிப்பிட்டுள்ள ஜயரூவன் பண்டார இலங்கை பொருளாதார வளர்ச்சி கல்வி போன்றவற்றை இடையில் தவறவிட்டுவிட்டது இந்த இடைவெளியை நிரப்பவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை தவிரவேறு மந்திரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.