வல்வெட்டித்துறை சென் செபாஸ்தியர் தேவாலய புனருத்தாரனப் பணிகள் தொடர்கின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறைச் சென் செபஸ்தியார் தேவாலயப் புனரத்தாரணப்பணிகள் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த வருடம் தேவாலய நிர்வாகத்தினரால் ஆரம்பித்திருந்த தேவாலயத் திருப்பணிகளிற்கு இந்த வருட ஆரம்பத்தில் ஒரு சில வல்வை நலன்விரும்பிகள் எடுத்த முயற்சியினால், பலரின் நிதி உதவிகள், குறிப்பாக புலம்பெயர் நலன் விரும்பிகளின் உதவிகள் தேவாலய நிர்வாகத்துக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கிட்டதட்ட (10) பத்து இலட்ச ரூபாய் வரை கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது. இன்னும் ஒரு சில நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கங்கள் தமக்கு ஏற்கனவே உறுதியளித்தபடி குறிப்பிட்ட நிதிகளை தமக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் புனருதாரணப் பணிகளை விரைந்து முடிக்க முடியும் என தேவாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில தினங்கள் முன்பு தேவாலய திருத்த வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு சென்று நாம் கண்ணுற்றவை.....
பெரும்பகுதி தேவாலய உட்புறப் பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது, இன்னும் சில பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தேவாலயத்தின் வெளித்தோற்றம் தொடர்ந்தும் பரிதாபதுக்குரியதாகவே தென்படுகின்றது. தேவாலயக் கட்டத்தின் காலம், நீண்ட காலம் சிறந்த முறையில் பராமரிக்கப்படாமை, வல்வையில் உள்ள கிருஸ்தவ மக்களின் எண்ணிக்கை, இதனால் நிர்வாகத்தின் பணக் கையிருப்பு என பல சாதகமற்ற விடயங்கள் தேவாலயத்தின் பழைய பொலிவிற்கு தடையாகவுள்ளன.
ஒரு காலத்தில் எமது ஊரின் மையப் பகுதியில் வல்வையின் ஒரு அடையாளமாக, கம்பீரமாக நின்ற இந்தத் தேவாலயம், இன்று அதன் அழகையும், பொலிவையும் தனித்துவத்தையும் தக்கவைக்க தடுமாறுகின்றது என்று கூறவிடாது, எல்லோரும் சிறிதாகவேனும் பங்களிப்புச் செய்வோம்.
தேவாலயத்துக்கு உங்கள் உதவிகளைச் செய்ய நேரடியாகவே நீங்கள் தேவாலய நிர்வாகத்தினரோடு தொடர்பு கொள்ளலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.