மனித உரிமை உறுப்பினர் இருவர் வல்வைக்கு விஜயம், பழைய இராணுவ முகாம் குடியிருப்புக்களை பார்வையிட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2013 (வியாழக்கிழமை)
மனித உரிமை குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்று வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்தனர்.
இவர்கள் வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்திருந்த பழைய இராணுவ முகாமுக்கு உட்பட்ட குடியிருப்புக்களை பார்வையிட்டனர்
சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள், மனித உரிமை இல்லத்தில், தமது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அளித்த புகாரையடுத்தே, இவர்களின் விஜயம் இடம்பெற்றிருந்தது. மனித உரிமை உறுப்பினர்கள் பழைய முகாம் பகுதியில் உள்ள வீடுகளைப் பார்வையிட்டதுடன், வீட்டு உரிமையாளர்களையும் சந்தித்திருந்தனர்.
இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு.m.k.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை தவிசாளர், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமக்கு தகுந்த நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் பலர் வல்வெட்டித்துறை போலீஸ் நிலையம் மற்றும் மனித உரிமை இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனுடன் சம்பந்தப்பட்ட செய்தி
வல்வையில் அமைந்துள்ள 7 ஆவது விஜயபாகு படையணியால் 19 வீடுகளும் 18 காணிகளும் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.