வங்கக்கடலில் தாழமுக்கம், யாழின் கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2013 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் பருத்திதுறைக்கு கிழக்காக சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது, மேலும் தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்பொழுது உருவாகி உள்ளது.
இத்தாழமுக்கம் முதலில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் தற்பொழுது வடமேற்கு திசையில் நகர்ந்துவருகிறது. இந்த இத்தாழமுக்கம் (சிறிய சூறாவளி) நாளை அதிகாலை தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையேயான கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இத்தாழமுக்கம் காரணமாக வங்கக்கடலில் குறிப்பிட்ட பகுதிகளில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையும் பெய்ய பெரிதும் வாய்ப்புள்ளது.
நகர்ந்து வரும் இத்தாழமுக்கத்தினால், யாழ் தீபகற்பத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்கள் பாதிக்கப்படும் அபாயங்கள் உள்ளன. குறிப்பாக பருத்திதுறையிலிருந்து, கட்டைக்காடு, நாகர் கோவில் மற்றும் வெற்றிலைக்கேணி உட்பட்ட் சாலை வரையான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடியவாய்ப்புக்கள் உள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.