எம்மால் இதுவரை அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்த வேலை வாய்ப்பு சம்பந்தமான அரச அறிவிப்புக்கள் இன்றிலிருந்து எமது இணையத்தில் மாதம் இரு முறை உரியமுறையில் பிரத்தியேகமான பகுதியில் பிரசுரிக்கப்படவுள்ளன. இது VEDA (Valvai Education and Development Association) இன் ஒரு புதிய முயற்சியாகும்.
அரச வர்த்தமானியில் பிரசுரமாகும் அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை சுருக்கமாகவும், எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும் VEDA நிர்வாகிகள் விபரங்களைத் தொகுத்துள்ளனர், தொகுக்கவுள்ளனர். அதாவது சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன இதில் அடங்குகின்றன.
வேலை வாய்ப்பு தேடுபவர்களின் நன்மை கருதியும், தகவல் திரட்டு என்னும் நோக்குடனும் இதில் பிரசுரமாகும் விபரங்கள் அகற்றப்படாமல் நிரந்தரமாக வேலை வாய்ப்புத் தகவல்கள் (Jobs Information) என்னும் இந்த பகுதியில் பதிவில் வைக்கப்படும்.
அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் (VEDA 18-11-2013)
1. பதிவாளர் நாயகம் திணைக்களம்
புத்தகக்கட்டுநர் சேவையின் தரம் III பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2013.11.08 வர்த்தமானி விண்ணப்ப முடிவுத் திகதி :- 2013.11.29
கல்வித்தகைமை:-
1) கல்விப் பொது தராதரபத்திர (சாதாரணதர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் விசேடசித்திகள் இரண்டு உடன் ஆறு விடயங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
2) புத்தககட்டுநர் பதவிக்குரிய தொழிற்திறன், உயர் மற்றும் தொழிற் தகைமைகள் கல்வி ஆணைக்குழுவின் மூலம் நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் உரியதுறையில் தேசியதொழிற்தகைமை மட்டத்தின் இரண்டாம் மட்டத்தில் (NVQ) தொழிற்திறனினை பெற்றிருத்தல்.
2. காணி, காணி அபிவிருத்தி அமைச்சு நில அளவைத் திணைக்களம்
நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்டதேர்ச்சி அற்ற (PL01 - 2006 A) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2013.11.01 வர்த்தமானி விண்ணப்ப முடிவுத் திகதி :- 2013.12.15
1. திணைக்களத் தொழிலாளர்
கல்வித்தகைமை:-
கல்விப் பொதுதராதரப் பத்திர (சாதாரணதர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச்சித்திகளுடன் உடன் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 11,730.00
2. பங்களாப் பராமரிப்பாளர்
கல்வித்தகைமை:-
கல்விப் பொதுதராதரப் பத்திர (சாதாரணதர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச்சித்திகளுடன் உடன் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 13,060.00
3. உபகரணத் தொழிலாளர்
கல்வித்தகைமை:-
கல்விப் பொதுதராதரப் பத்திர (சாதாரணதர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச்சித்திகளுடன் உடன் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 14,375.00
4. லொறிசாரதிஉதவியாளர்
கல்வித்தகைமை:-
கல்விப் பொதுதராதரப் பத்திர (சாதாரணதர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் குறைந்தபட்சம் இரண்டு திறமைச்சித்திகளுடன் உடன் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
2013.11.16 வர்த்தமானி விண்ணப்ப முடிவுத் திகதி :- 2013.12.06
கல்வித்தகைமை:-
சிங்களம், தமிழ், ஆங்கிலமொழி, கணிதம் மற்றும் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் 6 பாடங்களுக்குக் குறையாது க.பொ.த. (சா. த.) பரீட்சையில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.மற்றும் க. பொ. த. (உ. த.) பரீட்சையில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது (சாதாரணபொதுப் பரீட்சையைவிட) சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.