வங்காள விரிகுடாவில் சில நாட்களின் பின்னர் மீண்டும் தாழமுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை நேரப்படி 11.30 மணிக்கு அகலாங்கு (Latitude) 14.50 பாகை வடக்கு மற்றும் நெட்டாங்கு (Longitude) 85.50 பாகை கிழக்கு என்னும் பகுதியில், அதாவது சென்னையிலிருந்து கிழக்காக சுமார் 350 கடல் மைல்கள் தொலைவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் (Low pressure) மேலும் தீவிரமடைந்து அதியுயர் தாழமுக்கமாக (Depression) மாறவுள்ளது. முதலில் மேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு வட மேற்குத் திசையில் நகரவுள்ள இந்த தாழமுக்கம் நாளை மறுதினம் ஆந்திராவிற்கும் ஒரிசாவிற்கும் இடையேயான நிலப்பகுதியைக் கடக்கவுள்ளது.
இத்தாழமுக்கத்தினால் யாழ் தீபகற்பத்துக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், யாழின் வட கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசங்கள் ஆழி அலையால் (Swell waves) பாத்திக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.