பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (General information Technology exam - GIT) ஆண்டு 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்றது. பொதுத் தகவல் தொழில்நுட்பம் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் புதிய பாடத்திட்டத்தின் முதலாவது பரீட்சை 2010 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும் இப்பரீட்சைக்கு, உட்டுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையில் தோற்றமளித்தனர்.
எல்லா ‘AB’ மற்றும் ‘C’ தரப் பாடசாலைகளில் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை பாடங்கள் ஆண்டு 12 மாணவர்களுக்கு நடாத்துவது கட்டாயமானது.
வல்வை சிதம்பராக் கல்லுரி AB தரத்தையும், வல்வை மகளிர் பாடசாலையும் AB தரத்தை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.