யாழில் திறக்கப்படவுள்ள முதலாவது உதைபந்தாட்ட விளையாட்டரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் அரியாலையில் (Ariyalai) A9 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உதைபந்தாட்ட விளையாட்டரங்கு, இந்த மாதக் கடைசியில் FIFA வின் (Fedaration International of Football Association), தலைவர் 'Sepp Blatter' அவர்களால் திறக்கப்படவுள்ளது.
சுமார் USD 400,000 (5 கோடி இலங்கை நாணயம்) செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ் விளையாட்டரங்கு ஆனது, யேர்மனிய அரசு மற்றும் FIFA ஆகியவற்றினால் நிதி உதவி அளிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
இவ் விளையாட்டரங்கானது, மைதானத்தை விட, ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அமரக் கூடிய வசதிகளையும் (Pavilion), பயிற்சி நிலையம், கேட்போர் கூடம் மற்றும் அறைகளைக் கொண்டவையாகும்.
வல்வெட்டித்துறைக்கு சுனாமித் திட்டத்தில் சுமார் 2 கோடி ரூபா, விளையாடரங்கு அமைப்பதற்கு வழங்கப் படவிருந்த போதும், இடப் பிரச்சனையால் இது கைகூடவில்லையென்பது இங்கு குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.