அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 2013.12.20 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013 (சனிக்கிழமை)
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் , தினமுரசு நாளிதழ்களில் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
அரசாங்க திணைக்களம்ஃ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது மதிப்பு வாய்ந்த வர்த்தகதாபனம் ஒன்றில் குறைந்தபட்சம் 1 வருட தகுதி வாய்ந்த அனுபவத்துடன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து கணனி விஞ்ஞானத்தில்/ தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு இளமானிப்பட்டம் அத்துடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் ஓர் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் :- JM-1 ரூபா 20890 - 10 X 365 – 18 X 550 - 34,440
பதவி :- கணக்காய்வு உதவியாளர்.
கல்வித்தகமை:-
சிங்களம்/ தமிழ், ஆங்கில மொழி, கணிதம் 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன், ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். க.பொ.த (உ/த) பரீட்சையில் 'பொதுப் பரீட்சையை' விட அவசியமான பாடங்களின் எண்ணிக்கையில் சித்தி அடைந்ததன் மூலம் மூன்றாம் நிலை கல்விநெறி ஒன்றினைப் பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம் :- MA 2 - 2 (ரூபா 14640 - 10 X 145 – 7 X 170 - 4 X 290 - 20 X 345 - 25310 )
பதவி :- நூலக உதவியாளர்.
கல்வித்தகைமை:-
சிங்களம்/ தமிழ், ஆங்கில மொழி, கணிதம் 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன், ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 6 பாடசித்தி பெற்றிருத்தல் வேண்டும். க.பொ.த (உ/த) பரீட்சையில் 'பொதுப் பரீட்சையை' விட அவசியமான பாடங்களின் எண்ணிக்கையில் சித்தி அடைந்ததன் மூலம் மூன்றாம் நிலை கல்விநெறி ஒன்றினைப் பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
சம்பளம் :- MA 2 - 2 (ரூபா 14640 - 16X 145 – 7 X 170 - 4 X 290 - 20 X 345 - 25310 )
பதவி :- மாநாட்டு மண்டப நடத்துனர்
கல்வித்தகமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றியிருப்பதுடன் குறைந்தது 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் :-PLI ( ரூபா 11930 – 10 X 120 – 10 X 130 - 7 X 145 - 15 X 160- 17845)
பதவி :- பிரதிப்பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்/ நிதி)
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து முகாமைத்துவம் சார்/ நிர்வாக சார் ஆகியவற்றில் பெறப்பட்ட பட்டதாரிப்பட்டத்துடன் முகாமைத்துவம் சார்/ நிர்வாக சார் ஆகியவற்றில் முதுமானிப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்தடன் முதல் பட்டதாரிப் பட்டத்துக்கு பின்னர் முகாமைத்துவம் சார் மட்டத்தில் 15 வருட அனுபவத்தில் பட்டதாரிபின் பட்டதாரி தகைமைகளுக்கு பின்னர் கூட்டுதாபன/ சபையொன்றில் அல்லது கீர்த்தியுள்ள கல்விசார் நிறுவனம் ஒன்றில் நீருபிக்கப்பட்ட வேலைத்திறமையுடன் சிரேஷ்ட முகாமையாளர் மட்டத்தில் 5 வருட அனுபவம்.
சம்பளம்:- H M 2-1 2006 ரூபாய் 44030 – 12 x1310 – 59750
பதவி :- பணிப்பாளர் (நிர்வாகம்)
கல்வித்தகைமை:-
இலங்கை நிர்வாக சேவையின் 1ம் வகுப்பிலுள்ள அலுவலர். முகாமைத்துவம்ஃ நிர்வாகத்தில் முதுமானிப்பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
சம்பளம்:- H M 1 – 32006 ரூ 41745 – 15 x 1100 – 58245
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமானத்துறைப்பிரிவு - கட்டுநாயக்க
2013.12.05 அன்று வெளி வந்த தினகரன்நாளிதழ்
பதவி :- தொழில்நுட்ப உதவியாளர் (வாகன மின்னியல்)
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது நிறுவனம் ஒன்றிலிருந்து தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (NDT) அல்லது சமனான தகைமைகளுடன் தொடர்புடைய துறையில் மேற்பார்வை அனுபவம் உட்பட 4 வருட அனுபவம் அல்லது க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 4 – 5 வருடங்கள் தொழில்பயிற்சி ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன் பின்னர் மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட தொடர்புடைய துறையில் 6 வருட அனுபவம். மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட திறன் பெற்ற மட்டத்தில் தொடர்புடைய துறையில் 12 வருட அனுபவம்.
சம்பளம் :- ரூபா 38065 – 48165
------------------------
5x 520 : 10 x750
பதவி :-எரிபொருள் நிரப்புதல் பொறுப்பதிகாரி
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது நிறுவனம் ஒன்றிலிருந்து தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (NDT) அல்லது சமனான தகைமைகளுடன் தொடர்புடைய துறையில் மேற்பார்வை அனுபவம் உட்பட 4 வருட அனுபவம் அல்லது க.பொ.த (சாஃத) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 4 – 5 வருடங்கள் தொழில்பயிற்சி ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன் பின்னர் மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட தொடர்புடைய துறையில் 6 வருட அனுபவம்.தொடர்புடைய துறையில் திறன் பெற்ற மட்டத்தில் 6 வருட அனுபவம்.
சம்பளம்:- ரூபா 35385 – 44710
------------------
5x445 : 10x710
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.03
===============================================
பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு
2013.12.15 அன்று வெளி வந்த தினகரன்நாளிதழ்
பதவி :- பட்டதாரி மொழி பெயர்பாளர் தரம் II (தமிழ் , ஆங்கிலம்)
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து தமிழை ஒருபாடமாக கற்றுப் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பட்டம். க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலமொழி அல்லது இலக்கியத்தில் திறமைச்சித்தி ஒன்று அல்லது க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி அல்லது ஆங்கில மொழிமூலமான உயர்தரப்பரீட்சையில் சித்தி.
சம்பளம்:-UMN 3 (II) ரூபா 22240 - 18 X 320 – 28000
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.06
=================================================
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இலங்கை தேயிலை சபை.
2013.12.17 அன்று வெளி வந்த தினகரன்நாளிதழ்
பதவி :- உதவிப்பணிப்பாளர் (பிரசாரம்) தரம் ii (MM – 1-1)
கல்வித்தகைமை:-
சந்தைப்படுத்தல்/ பொருளியல்/ வர்த்தகநிர்வாகம்/ பொதுநிர்வாகம்/ மற்றும் விஞ்ஞானதுறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதன் பின் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் தேயிலைத்துறை/ கைத்தொழில்/ சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச சந்தை தொடர்பில் ஆகக்குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பதவி :- சந்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் தரம் ii (JM – 1-1)
கல்வித்தகைமை:-
சந்தைப்படுத்தல்/ பொருளியல்/ வர்த்தகநிர்வாகம்/ பொதுநிர்வாகம்/ மற்றும் விஞ்ஞானதுறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டத்தைப்பெற்றுக்கொண்ட பின்னர் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM 1-1 -2006A 20,525 -10 X 365 -18 X 550 X 34,075
பதவி :- புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் ii ii (JM – 1-1)
கல்வித்தகைமை:-
புள்ளிவிபரவியல்/ பொருளியல்/ வர்த்தக நிர்வாகம் போன்ற துறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டத்தைப்பெற்றுக்கொண்ட பின்னர் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM 1-1 2006A : 20525 -10 X 365 -18 X 550 X 34075
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.31
===========================================
களனிப்பல்கலைக்கழகம் - இலங்கை
2013.12.17 அன்று வெளி வந்த தினகரன்நாளிதழ்
பதவி :- கணக்காளர் தரம் II
கல்வித்தகமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 தடவைக்கு மேற்படாதவாறு ஆகக்குறைந்தது 3 விசேடசித்தியுடன் 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். மற்றும் உயர் கல்வி அமைச்சு/ தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் தொழிநுட்ப கல்லூரியொன்றில் அல்லது பல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொண்ட வர்த்தக கல்வி சம்மந்தமான தேசிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் கணக்கியல்/ வணிகவியல் மற்றும் நிதி ஆகிய பாடங்கள் உட்பட 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.