வாக்களிப்பு மறுக்கப்பட்ட ஐவரும் போலீஸில் முறைப்பாடு, த.தே.கூ இன் தலமையையும் சந்தித்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2013 (வெள்ளிக்கிழமை)
இன்று காலை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும் இன்று நண்பகல் வல்வெட்டித்துறைப் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.
குறித்த வரவு செலவு திட்ட அமர்விற்காக நகராட்சி மன்றத்திற்கு சென்ற போது பொதுமக்கள் சிலர் தம்மை நகராட்சி மன்றத்திற்கு உள்ளே நுழைய விடாது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்ததாகக் குற்றம் சாட்டியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் தமது பிரசன்னமின்றி, தம்மை வாக்களிக்க விடாமல் நிறைவேற்றபட்ட இன்றைய வரவு செலவு திட்டம் தொடர்பாக குறித்த 5 உறுப்பினர்களும் சற்று முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.