உதயசூரியன் கடற்கரையில் சிரமதானப்பணிகள் நடைபெற்று வருகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2013 (திங்கட்கிழமை)
எதிர்வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டியை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் சிரமதானப்பணிகள் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இச்சிரமதானப்பணிகள் நேற்று முன்தினத்திலிருந்து இன்றுவரை நடைபெறவுள்ளது.
பிரதான வீதியிலுள்ள மதகடியிலிருந்து உதயசூரியன் கடற்கரைவரை அமைந்துள்ள கழிவு நீரை வெளியேற்றும் கால்வாயின் பெரும்பகுதி, பருவப் பெயர்ச்சிக் காலநிலையினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமான கடல்மண்ணினால் மூடப்பட்டுள்ளது.
இந்த மண்ணினை அகற்றும் பணியினையும் மற்றும் ஏனைய சிரமதானப் பணிகள் நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.