உதவிக்கு உரித்தான தனிநபரின் அல்லது ஒரு பொது அமைப்பின் வேண்டுதல்களை வெளிக்கொணருமுகமாகவும், குறித்த தகவலை உதவி புரியக்கூடிய நலன் விரும்பிகளின் பார்வைக்கு இலகுவாகக்கொண்டு செல்லும் நோக்குடனும் - ‘ஊருக்கு உதவுவோம்’ (We help Valvettithurai) என்னும் புதிய பகுதியை நாளையிலிருந்து அறிமுகப்படுத்துகின்றோம்.
இதுவரை எம்மால் பல்வேறு தரப்பட்டவர்களின் வேண்டுகோள்கள் அவ்வப்பொழுது பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருவதால், பிரசுரிக்கப்படும் வேண்டுகோள்கள் மிக விரைவாக பின்தள்ளப்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டும், எம்பிரதேசத்துக்குத் தேவையானவற்றை ஒருமுகப்படுத்தி தொடர்ச்சியாகத் தெரியப்படுதும் நோக்குடனும் இப்புதிய பகுதியை நாம் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்.
வல்வை நகரசபைக்கு உட்பட்ட எமக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்படும், நம்பிக்கையானது என எமது குழுமத்தினரால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு வேண்டுதல்களும் (பொதுவான அறிவித்தல்கள் அன்றி) இதில் சில மாதங்களுக்கு
இணைக்கப்பட்டிருக்கும்.
பொதுவான அறிவித்தல்கள் தொடர்ந்தும் செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் பகுதிகளில் பிரசுரமாகும்.
எம்மால் இதுவரை பிரசுரிக்கப்பட்டிருந்த வேண்டுகோள்களுக்கு ஓரளவு தானும் உதவிகள் கிடைத்துள்ளன, கிடைத்து வருகின்றன. ஆனாலும் இவற்றை நாம் ஒவ்வொன்றாக பிரசுரிக்கவில்லை. இத்தருணத்தில் உதவி புரிந்த அனைவருக்கும்
நன்றி கூறி தொடந்தும் பலர் நலிந்து கிடக்கும் எமது பிரதேசத்துக்கு உதவ முன்வருவார்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.