வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மன்னார் விரிகுடாவில் வலுவிழக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2014 (திங்கட்கிழமை)
இன்று முற்பகல் இலங்கை நேரப்படி 10.30 ற்கும் 11.30 ற்கும் இடப்பட்ட நேரத்தில் முல்லைதீவு கரையைக் (9.20 N long, 80.80 E) கடந்துள்ள தீவிர தாழமுக்கம் (deep depression), தற்பொழுது மன்னார் மாவட்டத்தை நோக்கி, மேற்கு தென்மேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இத்தீவிர தாழமுக்கம் (deep depression) தொடர்ந்து மேற்கு தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்னும் 24 மணி நேரத்துக்குள் மன்னார் வளைகுடாவிற்குள் நுழைந்து தாழமுக்கமாக (Low pressure) வலுவிழந்து, அதன் பின்னர் முற்றாக வலுவிழக்கவுள்ளது.
இந்த அரிதான காலநிலை நிகழ்வு இலங்கையின் மிக மிக நீண்ட காலத்தில் ஏற்பட்டுள்ளவொன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.