VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொறியியல் உதவியாளர் பதவி, உதவிப்பொது பொறியியல் உதவியாளர் பதவி வகுப்பு II தரம் II, உதவி புகையிரத நிலைய அதிபர் பதவி..... போன்ற வர்த்தமானி, தினகரன் ஆகியவற்றில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (02.01.2014)
2014.01.03அன்று வெளி வந்த வர்த்தமானி அறிவித்தல்
இலங்கை பொலிஸ் திணைக்களம்
01) பொலிஸ் கொஸ்தாபல் சாரதிப் பதவி (விஷேட அதிரடிப்படை)
கல்வித்தகைமை :-
1) க.பொ.த. (சா/த) பரீட்சையில் 2 தடவைகளுக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 2வது தடவையில் தோற்றிய விண்ணப்பதாரிகள் முதலாவது தடவையில் ஒரே தடவையில் 5 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
2) அரசினால் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் முழுநேர 3 வருட மோட்டார் தொழில்நுட்ப பாடநெறியினை பின்பற்றியிருத்தல் மற்றும் அத்துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
க.பொத. (சா/த) பரீட்சையில் கணிதம்இ தாய்மொழி உட்பட 2 தடவைகளுக்கு மேற்படாமல் குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 2வது தடவையில் தோற்றிய விண்ணப்பதாரிகள் முதலாவது தடவையில் ஒரே தடவையில் 5 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
1. க.பொத. (சா/த) பரீட்சையில் 2 தடவைகளுக்கு மேற்படாமல் தமிழ்இ கணிதம்இ ஆங்கிலம்இ விஞ்ஞானம் ஆகிய பாடங்களுடன் வேறு ஏதாவது ஒரு பாடத்திலும் திறமைச்சித்தியுடன் 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
2. க.பொத. (உ/த) பரீட்சையில் பௌதீகவியல்இ தூயகணிதம் உட்பட 4 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது புதிய பாடத்திட்டத்திற்கமைய இணைந்தகணிதம்இ பௌதீகவியல் உள்ளடங்கலாக 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு தேசிய கால்நடை அமைச்சு
உதவிப்பொது முகாமையாளர் (நிதி)
கல்வித்தகைமை :-
கணக்கியல்/ வர்த்தகம்/ விவசாய முகாமைத்துவத்தில் பட்டதாரிப்பட்டம் அல்லது ICASL/ ACCA/ CIMA ஆகியவற்றில் இடைநிலைமட்ட தகைமையுடன் பட்டப்பின் பெற்ற பட்டதாரிப்பட்டம் (முதுமானிப்பட்டம்) அல்லது ICASL/ ACCA/ CIMA ஆகியவற்றில் கூட்டிணைந்த/ இணை அங்கத்தினர் அத்துடன் புகழ்வாய்ந்த தனியார்/ அரசாங்க அமைப்பொன்றில் 15 வருட பட்டப்படிப்பின் தகைமைப்பட்டத்துடனான முகாமைத்துவ அனுபவம்.
சம்பளம் :- HM1-1-2006 ரூபா 38,350 – 15x 1100 – 55,030
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம் பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சு
உதவிப்பணிப்பாளர் (நிருவாகம்) பதவி
கல்வித்தகைமை :-
வியாபாரம்/ அரசாங்க நிருவாகம்/ முகாமைத்துவம்/ வர்த்தகம்/ பொருளாதாரம் ஆகியவற்றில் ஒரு வகுப்புடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெறப்பட்ட பட்டதாரிப்பட்டம் அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம்/ தனியார்துறை அமைப்பொன்றில் பொது நிருவாகத்தில் ஆகக்குறைந்தது 3 வருட பட்டப்படிப்பின் தகைமைப்பட்ட அனுபவம் அல்லது வியாபாரம்/ அரசாங்க நிருவாகம்/ முகாமைத்துவம்/ வர்த்தகம்/ பொருளாதாரம் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் விஷேட பட்டதாரிப்பட்டம் அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க/ தனியார்துறை அமைப்பொன்றில் பொது நிருவாகத்தில் ஆகக்குறைந்தது 5 வருட பட்டப்பின் பெற்ற தகைமைகள் பட்டதாரிப்பட்டம்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து வியாபாரம்/ வர்த்தகம்/ வியாபார நிருவாகம்/ அரசாங்க நிருவாகம்/ கணக்கிடல் ஆகியவற்றில் 4 வருட விஷேட பட்டதாரிப்பட்டத்துடன் கீர்த்தி வாய்ந்த அரசாங்க / தனியார்துறை அமைப்பொன்றில் ஆகக்குறைந்தது 1 வருட பட்டப்படிப்பின் தகைமைப்பட்ட அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம் :- JM 1-1 2006 A 20,525 – 10x365 – 18x550 – 34,075
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.