Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
சபா இராஜேந்திரன் (Sri Lanka)
Posted Date: October 13, 2024 at 19:40
தம்பி சிவாஜிலிங்கம் தேர்தலில் கேட்பதையிட்டு சந்தோஷம். பல வருடங்களாக இவருடைய செயல்பாடுகளை அறிந்தவன் என்ற முறையில் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஈழத்தமிழரின் உரிமைகளை எப்படி வென்றெடுக்கலாம் என்ற சிந்தனையும் வல்வெட்டித்துறையை எப்படி முன்னேற்றலாம் என்ற செயல்பாடும்தான் இவரது வாழ்க்கையின் குறிக்கோள். கடந்த காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பிடும்படியாக அண்மையில் இவரது பெரு முயற்சியால் கட்டப்பட்ட ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒரு உதாரணம்.
இவருடைய அரசியல் கருத்துக்கள் பற்றி நான் விமர்சிக்கவில்லை. தமிழர் நலம் சார்ந்து இயங்கி வரும் தமிழ்க் கட்சிகளிடையே கொள்கையளவில் பெரிய வித்தியாசமில்லை. எவர் வந்தாலும் ஒன்றுதான். ஆனால் சிவாஜி ஒரு MP ஆக வந்தால் நிச்சயமாக இந்தப் பிரதேச மக்களுக்கு மிகவும் பிரஜோசனமாயிருக்கும். நேர்மையானவர். ஊழலற்றவர். இலகுவில் சந்திக்கக் கூடியவர். ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக ஸ்தலத்திற்குச் சென்று உதவக்கூடியவர்.
ஆகவே வல்வெட்டித்துறை மக்களையும் இந்தப் பிரதேச மக்களையும் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்.
" எங்கள் மத்தியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வோம். "