வல்வையைச் சேர்ந்த பெண் இரு குழந்தைகளுடன் மரணம், கொலை என சந்தேகம்?
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2014 (சனிக்கிழமை)
லண்டனில் நேற்று முன்தினம் வல்வெட்டிதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் தனது இரு குழந்தைகளுடன் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் வயது 33, குழந்தைகளின் வயது 5 மற்றும் 7 மாதங்கள் ஆகும்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை, லண்டன் நேரம் 1720 மணியளவில், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மூவரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த 2 குழந்தைகளின் மரணமும் கொலை எனத் தெரிவித்துள்ளார் போலீசார், பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் எதனையும் வெளியிடவில்லை. குறித்த செய்தி லண்டனில் சகல ஊடகங்களிலும் தற்பொழுது ஒலி, ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.