உடுப்பிட்டி ஊடான பருத்தித்துறை தொண்டைமானாறு வரையான 757 பஸ் சேவையை ஆரம்பிக்க கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2014 (வியாழக்கிழமை)
போர்கால சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உடுப்பிட்டி ஊடான பருத்தித்துறை தொண்டைமானாறுக்கான சேவையான 757 இலக்கமுள்ள பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கமாறு குறித்த பிரதேசமக்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போவினால் கடந்த காலங்களில் பருத்தித்துறை, அல்வாய், நவிண்டில், உடுப்பிட்டி ஊடாக தொண்டைமானாறு வரையான சேவையான 757 இலக்க பேருந்து சேவை நடாத்தப்பட்டு வந்தது.
எனினும் கடந்த போர்கால சூழ் நிலை காரணமாக தடைப்பட்டிருந்த இச்சேவை இன்னும் மீள ஆரம்பிக்கப்படவில்லை. இதன்காரணமாக பாடசாலை மாணவர்கள், மற்றும் குறுந்தூரம் செல்லும் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதை கருத்தில்கொண்டே மேற்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.