மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, 60 பேர்வரை காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2014 (வெள்ளிக்கிழமை)
தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 60 பேர்வரை காயம் அடைந்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுத் திருவிழா பிரதி வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்ட தமிழர்களின் இந்த பாரம்பரிய வீர விளையாட்டு விழா, மதுரை
மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமேடு என்னும் இடத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றிருந்தது.
திருச்சி, மதுரை, சிவகங்கை என பல இடங்களிலும் இருந்தும் 600ற்கு மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டிக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தன. காளையை அடக்குவதற்கென 600 வீரர்களும் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
50க்கு மேற்பட்டோர் காயம்
இந்தத் திருவிழாவில் வீரர்கள், பார்வையாளர்கள் என 59 பேர் வரை காயமுற்றதாகவும், இதில் 7 பேர் மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுரைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.