அமெரிக்காவை மீண்டும் கடும் குளிர் தாக்கியது, நியூயோர்க், பிலடெல்பியா நியூஜேர்சியில் 18 அங்குலத்திற்கு பனிப்பொழிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்த வேளையில், இந்தச் சீரில்லாத காலநிலை மீண்டும் இப்போது அமெரிக்காவைத்
தாக்க ஆரம்பித்துள்ளது.
இந்த கடுங்குளிரால் நியூயோர்க் (New York) , பிலடெல்பியா (Philadelphia), நியூஜேர்சி (New Jersey) போன்ற மாநிலங்களில் 18 அங்குலத்திற்கும் கூடுதலான பனிக்கட்டிகள் படர்ந்துள்ளமை அந்த நாட்டு செய்திகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இந்தப் பனிப்புயலால் 3000 ற்கும் மேலான விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நியூயோர்கில் பல அரச காரியாலயங்கள் இயங்கவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு முன்பாக
America Hit By Snowtorm
CHICAGO என்னும் இடத்தில் உள்ள BURNHAM HARBOUR ல் ஐஸ் உடைக்கும் TUGBOAT
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.