அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயதான Stanislas Wawrinka வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2014 (திங்கட்கிழமை)
இன்று 26/01/2014 ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திராலியாவின் துறைமுக நகரமான மெல்பெர்னில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australian Open Tennis 2014) க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு இன்றைய டென்னிஸ் உலகின் முதல்தர வீரரான, ஸ்பெயின் (Spain) நாட்டைச் சேர்ந்த Rafael Nadal யை எதிர்த்து (Swiss) சுவிட்சலார்ந்து நாட்டைச் சேர்ந்த Stanislas Wawrinka மோதினார்.
மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான இந்தப் போட்டியில், 28 வயதான இளம் விளையாட்டு வீரர் StanislasWawrinka வின் அதிரடி ஆட்டத்தினால், இன்றைய முதல் தர டென்னிஸ் வீரர் Rafael Nadal யைச் சற்று நிலைகுலைந்து போனது என்னவோ உண்மைதான். மைதானத்தில் Rafael Nadal க்கு ஏகப்பட்ட ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்தும் அவரது உடல்நிலை இன்றைய ஆட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இன்றைய போட்டியில் 6-3, 6-2, 3-6, 6-3 என புள்ளிகள் மூலம் Stanislas Wawrinka 2014ம் ஆண்டுக்கான Astralian Open Tennis--2014 சாம்பியன் ஆக தெரிவானார்.
17 தடவைகள் டென்னிஸ் சாம்பியனாக வந்த சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் Roger Federer க்குப் பிறகு இப்போது இந்த இளம் விளையாட்டு வீரர் தனது நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
தனது முதுகு வலியால் பெரும் அவதிப்பட்ட Rafael Nadal, இன்று தனது விளையாட்டை திறம்பட விளையாடமுடியாமல் போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.