வல்வெட்டித்துறையிலுள்ள விநாயகர் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படும் ஷஷ்டி விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2012 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பாக விநாயக ஷஷ்டி நோன்பு அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. இருபத்தொரு தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விரதம்கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை (29.11.2012) முதல் மார்கழி மாத வளர்பிறை ஷஷ்டி (18.12.2012) வரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்விரத காலத்தில் விநாயகப்பெருமான் திருக்கோவில்கள் யாவற்றிலும் காலை, மாலை வேளைகளில் விசேட அபிஷேக ஆராதனைகளும் பிள்ளையார் கதை படிப்பும் (பெருங்கதை) இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை நெடியகாட்டு திருசிற்றம்பல பிள்ளையாரின் கஜமுகாசூர சம்ஹாரம் வல்வை முத்துமாரியம்மன் ஆலய வீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மறுநாள் பெருங்கதை நிறைவும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.