நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற அமெரிக்க தயாரிப்பான போயிங் 777-200ER ரக விமானம் 12 விமான சிப்பந்திகளுடனும்,227 பயணிகளுடனும் காணாமல் போயுள்ளது.
இவ் விமானமானது மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு பெய்ஜிங்க்கு சென்று கொண்டிருந்த வேளையில் புறப்பட்டு 2 மணித்தியாலங்களில் உள்ளூர் நேரப்படி சனி முற்பகல் 2.40(18:40GMT வெள்ளி) தென் சீனக்கடலுக்கு மேலாக பறந்து கொண்டிருக்கும்போது வியட்நாம் கடல் எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும்போது காணாமல் போயுள்ளது.
விமானத்தில்154 சீனப்பிரைஜைகளும், 38 மலேசியர்களும்,7 இந்தோனேசியர்களும்,6 ஆஸ்திரேலியர்களும்,5 இந்திய பிரைஜைகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் பீஜிங் விமான நிலையத்தில் ஒன்றுகூடி சோகத்துடன் என்ன நிலை என்று அறியாவண்ணம் உள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று 22 வானூர்திகளும், 40க்கு மேற்பட்ட கப்பல்களும் மீட்பு பணியில் சடலங்கள், விமான பாகங்களை தேடியவண்ணம் உள்ளன. நேற்று வியட்நாம் செய்தி சேவை ஒன்று அந்நாட்டு விமானங்கள் 15-20km வரையான எண்ணை கசிவை கண்ணுற்றதாகவும் அது மேற்படி விமானத்தினதாக இருக்கலாம் என்று ஊகம் வெளியிடப்படுள்ளது. இருந்தும் சீன அரசு அது உறுதிபடுத்தபடவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தபட்டு, தாக்கப்பட்டு இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என மலேசிய அரசாங்கம் மறுத்துள்ளது.
இறுதியாக கிடைத்த தகவல்களின்படி விமானம் ராடார் திரைகளில் காணாமல் போவதற்கு முன்னர் திருப்பபட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. எனவே திருப்புவதுக்குரிய கால அவகாசம் இருந்தபோது விமானிகள் ஏன் எந்தவோர் தொடர்புமையத்தையும் தொடர்பு கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பபட்டுள்ளது. மேலும் விமானம் காணாமல் போன இடத்தில் காலநிலை சீராக இருந்தும், விமானி அபாய எச்சரிக்கை அனுப்பாமல் திடீரென்று காணாமல் போனது பெரும் மர்மமாக உள்ளது. அமெரிக்காவின் 19 வருட போயிங் விமான தயாரிப்பில் மேற்படி விமானமே பாரியதொரு விபத்தாக அமைய போகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.