வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட"வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக அறிவகம்" நேற்று மாலை 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவகம் (மறைந்த) திருமதி செந்திவடிவேல் சிவரூபராணி அவர்களின் ஞாபகார்த்தமாக, திரு.செந்திவடிவேல் குடும்பத்தினரால் அமைக்கப்பெற்றதாகும்.
ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரர் திறந்து வைத்தார்.
நூலகத்தினை கின்னஸ் புகழ்வீரர் திரு.குமார் ஆனந்தனின் (ஆழிக்குமரன் ஆனந்தன்) மூத்த சகோதரர் கலாநிதி.நித்தியானந்தன் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், அரச உத்தியோகத்தர்கள், கழகங்களின் அங்கந்தவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வு
திறப்பு விழாவினத் தொடர்ந்து சில மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன.
அறிவகம்
தீருவில் மைதான வீதியில், மைதானத்திற்கு எதிராக, மிகவும் அமைதியான பகுதியில் அமைந்துள்ள இந்த அறிவகத்தில், சாதாரண நூலகங்கள் போல் அன்றி, இன்றியமையாத புத்தகங்களுடன், பாடசாலை மாணவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் நூலகம் வந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, இந்த அறிவகத்தில் அறிவு சார்ந்த சிறார் விளையாட்டுக்களையும் மட்டுப்படுத்தப்பட்டளவில் சேர்க்கவுள்ளனர். குறித்த விளையாட்டுக்கள் அறிவகத்தின் 1 ஆம் மாடியில் அமையவுள்ளன.
இணையத்திலும் நூல்கள் பற்றிய விபரங்கள் .வெளியிடப்படவுள்ளன
தேவையுடையவர்கள் இலகுவாக புத்தக விபரங்களைப் பெறுவதற்காக, இணையத்திலும் இவ் அறிவகத்தினர் புத்தகங்களின் விபரங்களைச் சேர்க்கப்படவுள்ளன. இதற்கென ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படவுள்ளது.
மேலும் அரசு சார்ந்த நூலகங்களில் உள்ளதைப்போல் நூலகக் காப்பாளர் (Librarian) ஒருவரும் நிரந்தரமாக பணியில் அமர்த்தப்படவுள்ளார்.
சாதாரண நூலகங்களின் கருத்திலிருந்து விலகி அமையப்பெற்றுவரும் இந்த அறிவகம், பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த அறிவகம் வல்வை சந்தியிலிருந்து தென் மேற்கு திசையில் சுமார் 500m தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
kuttimani (india-trichy)
Posted Date: May 02, 2014 at 19:17
ethai parkkumpothu migavum santhosamaga erukkirathu melum valara vendi valththukiren.
by.valvai.star photo kuttimani
spekkar thurai annavin sevai valvaiku thaevai.
K.S.Thurai (Denmark)
Posted Date: April 30, 2014 at 06:40
இப்படியோர் அரிய செயலைச் செய்த செந்திவடிவேல் குடும்பத்தினர்க்கு எனது மகத்தான பாராட்டுக்கள்.
மக்களை வாசிப்புப் பழக்கத்திற்கு கொண்டுவர எடுத்துள்ள இந்த முயற்சி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க பெரிதும் துணைபுரியும்.
மேலும் இந்த அரிய காட்சிகளை உடனுக்குடன் வெளியிட்டு வல்வையை எம்முன் காட்டும் உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.