அமெரிக்க 'நேவி சீல்' இனால் கையகப்பட்டிருந்த 'Morning Glory' இன் வல்வை மாலுமிகள் இருவரும் விடுதலையின் பின் நேற்று இலங்கை வந்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2014 (வியாழக்கிழமை)
கடந்த 16.03.2014 அன்று அமெரிக்க சிறப்பு படையான 'நேவி சீல்ஸ்' (Navy Seals) இனால் கைப்பற்றபட்ட எண்ணை தாங்கிக் கப்பலான 'Morning Glory' இன் வல்வையை சேர்ந்த மாலுமிகள் விடுதலையின் பின் இருவரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.
மேற்படி Morning Glory கப்பலானது லிபியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள Al-Sidra என்னும் துறைமுகத்திலிருந்து மசகு எண்ணையை (Crude oil) லிபிய அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி ஏற்றியதற்காக தடுத்து வைக்கபட்டிருந்து பின்னர் அங்கிருந்து வெளியேறி சர்வதேச கடற்பரப்பிற்கு சென்று சைப்ரஸ் நாட்டின் கடற்பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது லிபிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க நேவி சீல் படையினரால் கைப்பற்றபட்டு பெங்காசியில் லிபிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கபட்டது.
அந்நேரத்தில் மாலுமிகள் அனைவரும் சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி நடத்தபடுவார்கள் என லிபிய அரசாங்கத்தால் உறுதிமொழி வழங்கபட்டிருந்தது. பின்னர் மாலுமிகள் குழாமில் அதிகமானோரைக் கொண்ட பாகிஸ்தானிய தூதுவர் மூலம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அந்தந்த நாட்டு மாலுமிகள் அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டு விடுவிக்கபட்டிருந்தனர்.
இருந்தும் இலங்கை தூதரகம் லிபியாவில் இல்லாமை காரணமாக இவ் இருவரும் எதுவித தொடர்புகளும் இல்லாமல் மேலும் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் எகிப்தில் உள்ள இலங்கை தூதரகமூனூடாகவே இவர்கள் பொருப்பேற்கபட்டு நேற்று மாலை கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்து இன்று காலை வல்வையை வந்தடைந்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.