வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தீர்த்த திருவிழாவையொட்டி தற்போது வசந்த விழா வல்வையில் இடம்பெற்று வருகிறது.
வல்வெட்டிதுறையின் வேம்படி பகுதியிலிருந்து அம்பாள் ஆலயம் வரை வீதியின் இருமருங்கிலும் வாழைகள் கட்டபட்டு மின்விளக்குகள் கட்டப்பட்டு விமரிசையாக வசந்த விழா நடைபெற்று வருகிறது.
தற்போது ரேவடி கடற்கரையில் பஜனையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள அதேவேளை மதவடியில் சாந்தன்,சுகுமாரின் இசைக்கச்சேரி இடம்பெறவுள்ளது. இதேவேளை சிதம்பரா மைதானத்திலும் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வசந்த விழாவை காண வெளியூர்களில் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். வல்வெட்டித்துறை சந்தியில் போலீசார் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு ஒரு வழிப்பாதையாக அம்மன் கோவில் வரை மாற்றியுள்ளனர்.
இந்திர விழாவை முன்னிட்டு வல்வை ரேவடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உருவங்கள், வண்ண வண்ண விளக்குகள் மற்றும் கலை நிகழ்வுகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.