அமரர் பரஞ்சோதியப்பா, சந்திரமோகன் ஞாபகார்த்த உதைபந்து -தீருவில், சைனிங்க்ஸ், ரெயின்போ முறையே 1 ஆம், 2 ஆம் ,3 ஆம் இடங்களைப் பெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2014 (வியாழக்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும், அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் மற்றும் இறுதிப்போட்டியும் இன்று மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது.
முதலாவதாக நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரெயின்போ விளையாட்டுகழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக்கழகம் 1: 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவதாக நடைபெற்ற இறுதியாட்டத்திற்கான ஆட்டத்தில் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் தீருவில் விளையாட்டுக்கழகம் 5 :1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் சண்முகதாஸ் உம், சிறந்த கோல்காப்பாளாராக சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் விஜேந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு பருத்தித்துறை செயலக போட்டிகளில் பங்கு பற்றி வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்த பூஜா, பவித்திரா,கார்த்திகா மூன்று மாணவிகளுக்கும் அமரர் பரஞ்சோதியப்பா ஞாபகார்த்தமாக பணப் பரிசும் வழங்கப்பட்டதுடன், well wisher medical center ரினால் மூவருக்கும் தலா 1000 ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த நடைபெற்ற உதைப்பந்து கடந்த வருடமும் நடைபெற்றிருந்ததுடன், ரெயின்போ விளையாட்டுக்கழகம் இவ் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.