வல்வெட்டித்துறை நகர சபையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நகர சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், கடந்த திங்கட் கிழமை முற்பகல் 10 மணிக்கு நகர சபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வல்வை நகர சபையில், வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது, நகர சபைத் தலைவர் அவர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்களும் எதிராகவும் வாக்களித்திருந்தனர். இரண்டு உறுப்பினர்கள் சமூகம் கொடுக்கவில்லை. இதனால் இவ் வரவு செலவுத் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
கடந்த டிசம்பர் மாதம் இரு தடவைகள், இவ்வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும், உறுப்பினர்கள் சமூகமளிக்காததால் கைவிடப்பட்டிருந்ததும் இங்கு குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.