வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் ஆதிகோவிலடி மீன் சந்தை, பொலிகண்டி மேற்கு மீன் சந்தை, தொண்டமானாறு பெரிய கடற்கரை மீன்சந்தை ஆகிய சந்தைகளை குத்தகைக்கு எடுத்து நடாத்தும் மீனவசங்கங்கள், 18.01.2013 ஆம் திகதிக்குரிய மீள் கேள்வியில் பங்குபற்றி கேள்வி நடைமுறைகளுக்கு அமைய பணத்தை செலுத்தி 2013ஆம் ஆண்டிற்கான தமது குத்தகையை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டிற்கான தமது குத்தகையை உறுதிப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் பொது மக்கள் கலந்துகொள்ளும் பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று சம்பந்தப்பட்ட மீனவ சங்கங்களுக்கு அறிவித்தல் ஒன்று விடப்பட்டுள்ளது. இது பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.