திரு.யோகசபாபதிப்பிள்ளை மற்றும் திரு.குலநாயகம் ஆகியோரின் சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம் தொடர்பான விளக்க அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2013 (வெள்ளிக்கிழமை)
அண்மையில் நடைபெறவிருந்த சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுகூட்டம் மாசி 10 ஆம் திகதிற்குப் பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதனையடுத்து அக் கூட்டத்தை நடாத்தாததின் காரணத்தை விளக்கக்கோரியும், விரைவில் அக் கூட்டத்தை நடாத்தக் கோரியும் பலரால் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை எமது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
மேற்கண்டவற்றுக்கு விரிவான விளக்கமளித்து, வல்வை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் செயலாளர் திரு. யோகசபாபதிப்பிள்ளை, மற்றும் வல்வை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.குலநாயகம் அவர்களும் நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கைளை கீழே இணைத்துள்ளோம்.
இவ் அறிக்கைகளில், வல்வை நகரசபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் எழுதிய 'கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பழைய மாணவர் சங்கங்களைப் புனரமைக்குமாறு கோருதல்' கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.