வல்வையில் 35 அடி உயரமான பட்டம் பொங்கல் தினமான இன்று ஏற்றப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2013 (திங்கட்கிழமை)
வல்வை வேவில் இளைஞர்களினால், இன்று 35 அடி மற்றும் 25 அடி உயரமான பட்டங்கள், வேவில் பிள்ளையார் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஏற்றப்பட்டது.
இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட பட்டங்களில் இதுவே அதிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த பட்டம் பறக்கவிடும் காட்சியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் நெல்லியடி போன்ற பிரதேசங்களிலிருந்து இடங்களிருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறும் வினோத பட்டப்போட்டியினையும் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.