பருத்தித்துறை நகரசபை அலுவலகம் 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2013 (சனிக்கிழமை)
பருத்தித்துறை நகரசபையின் புதிய மாடிக் கட்டிடம், பொது நூலகம் ஆகியவை 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியுள்ளன. போர்க்காலத்துக்கு முன்னர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் இருந்த பருத்தித்துறை நகரசபை அலுவலக கட்டடம் முற்றாக சேதமடைந்திருந்தது. அத்தோடு அதனை அண்டிய ஹாட்லிக் கல்லூரி,மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி உள்ளடங்கிய பருத்தித்துறை இறங்குதுறைப் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது 2 வருடங்களாக திறக்கப்பட்டிருந்த பருத்தித்துறை கடற்கரை வீதியின் பழைய இடத்தில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் புதிய மாடிக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. பொது நூலக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் நவீன பொது நூலகத்திற்கான கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதுவரை காலமும் தனியார் வீடொன்றில் இயங்கிவந்த நகரசபை அலுவலகமும், நகரசபை செயலகமும் மற்றும் தும்பளை வீதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த பொது நூலகமும் 18ம் திகதி முதல் (திங்கட்கிழமை) சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தில் இயங்கும் என பருத்தித்துறை நகரசபை தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.