வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிலுவைப் பாதை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2013 (புதன்கிழமை)
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு யாழ் மறை மாவட்டத்தின் சக்கோட்டை பங்கின் ஆலயங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலுவைப்பாதை நேற்று வல்வெட்டித்துறை சென்.செபஸ்தியர் தேவாலயத்தில் நடைபெற்றது.
சக்கோட்டை புனித சபஸ்தியார் ஆலயத்தில் ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதியூடாக வல்வெட்டித்துறை புனித சென்.செபஸ்தியர் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் சக்கோட்டை பங்கின் ஆலயங்களின் மக்கள் அனைவரும் பங்குபற்றினர்.
அத்துடன் அரிதாஸ் அவர்களின் குடும்பத்தினரால் கல்லறை ஆண்டவர் செரூபம் ஊன்றும் புதிதாக புனித செபஸ்தியர் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினை பங்குந்தந்தை அருட் திரு. நிரூபன் அடிகளார் நடாத்திவைத்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.