வல்வெட்டித்துறை அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் வரும் 11இல் ஆரம்பம், தீர்த்தத் திருவிழா அன்று நடைபெறும் இரவு நேர 'இந்திர விழா' நடைபெறாது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி தேர்த் திருவுழாவும், 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அம்மன் கோயில் தர்மகர்த்தா சபையினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தில் குறிப்பிடதன் பிரகாரம், இறுதி நாளன்று, தீர்த்தஸ்தானம் முடிந்ததும் அம்மன், நெடியகாடு விநாயகர் கோயிலை சென்றடைந்ததும் உடனேயே அங்கிருந்து, அம்பிகை ஆலயம் நோக்கி வருவார் என தெரியவருகின்றது. இது அன்று நிகழவுள்ள 'சந்திர கிரகணம்' பிரகாரம் அமையபெற்ற ஒரு முடிவாகும் என அறிய வருகின்றது.
வல்வெட்டித்துறையில் நடைபெறும் மிகப் பிரதான சமய விழாவான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எமது இணையதளமான வல்வெட்டித்துறை.org இல் சிறப்புக் கவிதைகள், செய்திகள் மற்றும் புகைப் படங்கள் என்பவற்றை நாம் பிரசுரிக்கவுள்ளோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.