150 mm ற்கும் அதிகமான கடும்மழை – வானிலை அவதான நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2015 (சனிக்கிழமை)
காற்று ஒன்று சேருவதன் (Convergence of wind flows) காரணமாக கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையம் (Meteorology Department) தெரிவித்துள்ளது.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள எதிர்வரும் 24 மணி நேரத்திற்கான அசாதாரான காலநிலை சம்பந்தமான அறிவிப்பில், கடும்மழையானது நாட்டின் தென் மேற்குப் பகுதியில் எதிர்பார்க்கப்படுவதாயும், நாட்டின் சகல பகுதிகளிலும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதாயும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.