வல்வை சிறுவர் துயிலும் பூங்கா புனரமைப்புப் பகுதிகளின் ஒரு பகுதி பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2013 (திங்கட்கிழமை)
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் 'PM Foundation' எனும் அமைப்பினால் சில நாட்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது பூர்த்தியடைந்துள்ளது.
இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த இவ் இடுகாடானது, வல்வை நகாராட்சி மன்றத்தின் அனுமதியுடன், தற்பொழுது சுத்தம் செய்யப்பட்டு, சிறுவர் கல்லறைகள் மெருகூட்டப்பட்டுள்ளன. அத்துடன் சாதாரண பெயருடன் இருந்த இம் மயானத்திற்கு 'வல்வை சிறுவர் துயிலும் பூங்கா' எனவும் பெயரிடப்படவுள்ளது. மேலும் இம்மயானத்தை வெளிநாடுகளில் அமைந்திருக்கும் மயானங்களைப் போன்று மாற்றியமைக்கவும் PM foundation முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
PM foundation யினரின் இந்த முயற்சிக்கு சில நலன் விரும்பிகள் உடனடியாக முன் வந்துள்ளதுடன், பலர் குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் இருந்து பாராட்டிய வண்ணமுள்ளனர். PM foundation யின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு எல்லோரும் தம்மாலான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
எமது வேண்டு கோளுக்கிணங்க PM foundation யினர் எமக்களித்த அவர்களின் தொடர்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM foundation
திரு பிரேம் குமார்
திரு. மணி
Email - vvtpmfoundation@hotmail.com
T.P - 00-44-7943743878,00-44-7886393116
படங்களில் PM foundation யின் அங்கத்தவர் ஒருவர், பராமரிப்பு வேலைகளுக்குப் பொறுப்பானவர், வல்வை நகரசபைத் தவிசாளர், நன்கொடையாளிகள் சிலர் ஆகியோரைக் காணலாம்.
வல்வெட்டித்துறையின் கட்டுமானங்களில் ஒரு மாற்றம் வர வேணுமானால் PM foundation எடுத்துள்ள முயற்சிகள் போன்றவை உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் காணப்படும் மயானத்தினை கீழே உள்ள படங்களில் காணலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.