தாழமுக்கம் ‘மகாசென்’ இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷைக் கடக்கின்றது, வல்வையில் ஒரளவு பலத்த காற்று தொடர்ந்தும் வீசுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2013 (வியாழக்கிழமை)
வடக்கு வங்காள விரிகுடாவிலிருந்து, தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்கம் ‘மகாசென்’ ( Tropical Cyclone) இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாழமுக்கத்தினால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டிருந்தாலும், நேரடியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் இலங்கையின் வடபகுதியில் நேற்று பலத்த மழை ஏற்பட்டிருந்தது. இந்தப் புயலினால் இந்தியாவின் கிழக்குக் கரையோரங்களின் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதை வானிலை ஆய்வுமையங்களின் செய்மதிப் படங்கள் காட்டுகின்றன.
இந்த புயலினால் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால், நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவர் பலியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமானது (Tropical cyclone) மே மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிக்கின்றது.
கீழே உள்ள படங்களில் தாழமுக்கம் ‘மகாசென்’ யின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.