வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இயங்கி வரும் கணபதி பாலர் பாடசாலைக்கு, புதிய மாடிக்கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியினை கணபதி பாடசாலை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலையில் பாலர்களுக்கான வகுப்புக்கள் நடைபெற்றுவருகின்றது. யாழ் மாவட்டத்திலேயே முதற்தரம் என அனைவராலும் போற்றப்படுகின்ற வகையில் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இப்பாலர் பாடசாலையில் வல்வெட்டித்துறை மற்றும் இதனைச்சூழவுள்ள , பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, பொலிகண்டி தெற்கு, வல்வெட்டி, உடுப்பிட்டி, கெருடாவில், மயிலியதனை, மற்றும் தொண்டை மானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாலகர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இடவசதி இன்மையால் வகுப்புக்கள் உள்ளேயும், வெளியேயும் நடைபெற்று வருகின்றது. ஆகையால் 70* 25 அடிகள் அகல நீளத்தில் ஒரு இரு மாடிக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளார்கள்.
இதற்கான நிதியை வல்வை பொதுமக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம் பெயர்ந்து வாழும் வல்வை மக்களிடமும் நிர்வாகத்தினர் எதிர்பார்கின்றார்கள்.
நிர்வாகத்தினரின் அறிக்கையின் படி குறிப்பிட்ட கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாக்கள் (USD$1,20,000/-) தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுகின்றது.
இது சம்பந்தப்பட்ட அவர்களின் உத்தியோகபூர்வ வேண்டுகோள் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதில் மாடி கட்டுவதற்கான வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையில் மிகச் சிறப்பாக, சிறந்த ஒரு சுற்றாடலில், குறிப்பிடக்கூடிய சில வசதிகளுடன், பலவருடங்களாக இக்கணபதி பாலர் பாடசாலை இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இப்பாலர் பாடசாலை, வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து, கிழக்காக சுமார் 900m தொலைவில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில், நெடியகாட்டு பிள்ளையார் ஆலய சுற்றுவளகத்தில் அமைந்துள்ளது.
இச் செய்தி ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்படுகின்றது.
இது தொடர்பான நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல், மற்றும் கட்டிட அமைப்பு பற்றிய வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.