அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தில் (Images of Valvai), கடந்த மாதம் அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடைபெற்றிருந்த நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு, (பகுதி 2 நாளை பிரசுரமாகும்)
இரு நிகழ்வும் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் (Images of Valvai) அமைந்த வல்வெட்டித்துறை "கீதாஞ்சலி " இல்லத்தில், 27 -04 -2013 காலை 10.00 மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந. நகுலசிகாமணி அவர்கள் தலைமையில் இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிறது. சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் 75 ஆவது ஆண்டை நினைவு கூறும் கேக் ( Cake ) ஜ கப்டன் கலைநேசன், கப்டன் விநாயகமூர்த்தி, கப்பல் பொறியியலாளர் கா. றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர்.
நகுலாசிகாமணி அவர்கள் தமது தலைமையுரையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் வணக்கம். எமது அன்னை முத்துமாரி திருவிழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதரர்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இன்று எமது அன்னபோரணி மேற்குநோக்கி அமெரிக்கா சென்றடைந்த வரலாறு படைத்த வைரவிழாவின் ஆரம்ப நிகழ்வையும் கனடாவிலிருந்து கையளித்த வரலாற்று ஆவணக்காப்பகத்தின் ஒருவருட நிறைவையும் சேர்ந்து கொண்டாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்விழா ஒரு ஆரம்பநாள். இந்த வருடம் முழுவதும் வல்வையிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு. அத்தோடு சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஆவணக்காப்பகம் மேலும் பல வளர்ச்சி கண்டுள்ளது. இணையதளங்களில் சுற்றுலா இடமாக பதியப்பட்டு பலர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த ஆவணகாப்பகத்தினை நீங்கள் அனைவரும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை என உணர்ச்சியுடன் தனது உரையை ஆற்றினார்.
வருகை தந்த வி.யோகானந்தவேல், டீ. யு சிதம்பராக்கல்லூரி ஆசிரியர் ஆ.ஸ்ரீதரன் பொறியிலாளர் அவுஸ்ரேலியா, பேராசிரியர் சபா இராஜேந்திரன் ( சிங்கபூர்), சே. குட்டித்துரை(மாமாச்சி) லண்டன், கப்பல் பொறியியலாளர் கா. றஞ்சனதாஸ், வல்வை மாலுமிகள் சங்கத் தலைவர், திரு. கமல் பேராதனை பல்கைக்கழக மாணவன், கு.அப்பாத்துரை (ஆசிரியர், எழுத்தாளர் ) ஆகியோர் அவணக்காப்பகத்தின் சேவையையும் இதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் உரையாற்றினார். வந்திருந்த அனைவருக்கும் அன்னைபூரணி Gloucester துறைமுகத்தில் நிற்கும் அழகு வர்ண Picture post card அனைவருக்கும் வழங்கப்பட்டு, கேக், சிற்றுண்டிகள், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாவரும் காப்பகத்தில் இந்த வருடம் மேலதிக வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்களையும் வரலாற்றுமிக்க படங்களையும் பார்த்து வியந்ததோடு எமது புலவர்களில் இலக்கிய, சமய, வரலாற்று நூல்களையும் ஆவண நினைவுச் சின்னங்களும் பெற்றுச் சென்றனர்.
தகவல் மற்றும் படங்கள் உமா நகுலசிகாமணி, கனடா.
வல்வை ஆவணக் காப்பகம் ஆனது, எமது இணையத்தில் வல்வையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பதியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.