நேற்றைய தினம் அம்மன் ஆலயங்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இவ் மகோற்சவம் பொதுவாக வருடத்தின் வைகாசி மாதத்தில் வரும் விசாக தினத்தில், அதாவது வைகாசிப் பூரணை தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை அன்று மாலை வேளைகளை நடைபெறுவது வழக்கம்.
இவ் மகோற்சவம் ஆனது வெகு சிறப்பாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மேற்கொள்ளப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆனது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ளது.
இயற்கை வளங்கொழிக்கும் சூழலை தன்னகத்தே கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு வடக்காகவும் கிழக்காகவும் நந்திக்கடல் நீரேரித் தீர்த்தம் அமைந்துள்ளது.
இங்கு நடைபெறும் இவ் வைகாசி விசாகப் பொங்கலை கொண்டாடுவதற்காக, முன்னைய காலங்களில் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்தும், வல்வெட்டித்துறை உட்பட, பக்தர்கள் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.