வருடத்தின் பொதுவான காலநிலைகளில் ஒன்றான தென்மேல் பருவக்காற்று (south west monsoon) ஆரம்பமானதைத் தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகின்றது. கொழும்பில் மேகமூட்டத்துடன் கூடிய மழை நேற்றும் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றது.
வைகாசியின் பிற்பகுதியில் ஆரம்பித்து புரட்டாதி மாதத்தின் கடைசிவரை நீடிக்கும் இந்தப் பருவப் பெயர்சிக் காலநிலையால் இலங்கையின் தெற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள் அதிகளவு மழை வீழ்ச்சியைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
தென்மேல் பருவப் பெயர்சிக் காலநிலை இலங்கையின் வட பகுதியில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எதுவித தாக்கத்தையும் கொண்டிருப்பதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.